fbpx
Homeபிற செய்திகள்கோவை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அலுவலகம் - செந்தில் பாலாஜி திறந்து...

கோவை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அலுவலகம் – செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்

“அண்ணா அறிவகம்“ எனும் கோவை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. திமுகவின் கொங்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி திறந்து வைத்து சிறப்பித்தார். தொடர்ந்து நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகத்தை பார்வையிட்டார்.

திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு பணி களுக்கான பிரத்யேக சிறப்பு அலுவலகமாக, நவீன தொழில்நுட்ப வசதிக ளுடன் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. கட்சிப் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கான பணி கள் இந்த அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அலுவலக திறப்பு விழாவில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன், திமுக மாணவரணி மாநில செயலாளர் வழக் கறிஞர் ராஜீவ் காந்தி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ், வழக்கறிஞர்கள் பி.கிருஷ்ணமூர்த்தி, முத்து விஜயன், விஸ்வநாதன், வால்பாறை நகர செயலாளர் குட்டி என்கிற சுதாகர், பொள்ளாச்சி நகர செயலாளர் அமுதபாரதி, மற்றும் கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை சட்டமன்ற தொகுதியில் உள்ள நகர, ஒன்றிய, ஊராட்சி கிளை கழக பிரதி நிதிகள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னோடிகள் உள்ளிட்ட ஏராளமானோர் திரளாக பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img