fbpx
Homeபிற செய்திகள்கைப்பந்து போட்டியில் காங்கயம் கல்லூரி அணிக்கு 2ம் இடம்

கைப்பந்து போட்டியில் காங்கயம் கல்லூரி அணிக்கு 2ம் இடம்

பாரதியார் பல்கலைக் கழக கல்லூரிகளுக்கு இடையே இடையே நடைபெற்ற மண்டல அளவிலான கைப்பந்து போட்டியில் காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் கல்லூரி மாணவர்கள் 2ம் இடம் பெற்றனர். இப்போட்டி கோவை கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

போட்டியில் 25 கல்லூரிகள் பங்கேற்றன. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் ஜி.சுரேஷ், காங்கேயம் குழும நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் முனைவர் சி.வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கல்லூரி தலைவர் என்.ராமலிங்கம், செயலாளர் சி.கே.வெங்கடாசலம், தாளாளர் எஸ்.ஆனந்தவடிவேல், பொருளாளர் சி.கே.பால சுப்ரமணியம் ஆகியோர் வெற்றி பெற்றவர்களை வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img