கோவை அவினாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர் ஹோட்டலில் கலாஷா பைன் ஜீவல்ஸின் தங்க நகை கண்காட்சி விற்பனை தொடக்கவிழா இன்று(14-ந்தேதி) நடைபெற்றது.
இதுகுறித்து கலாஷா பைன் ஜூவல்ஸ் பங்கு தாரர் அபிஷேக் வாஸ்கி, ஸ்வரன் குமார், ஆகியோர் கூறியதாவது:- இன்று (14ந்தேதி) தொடங்கி 17-ந்தேதி முடிய 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் மணப்பெண்களுக்கான நகைகள், கைவி னை அலங்கார நகைகள், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திருமண நகைகள், தங்கம், வைரத்தால் வடிவமைக்கப்பட்ட நகைகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட் டுள்ள நகைகள், மணப்பெண்களால் ஈர்க்கப்பட்டு அவர் களை ராணியாக மாற்றும் வகையில் அமைந்துள்ளது
இந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக நிகிதா வி.ஷா, பிரசன்னா விஸ்வ நாதன், செல்வி நிரூபனா நடராஜன், டாக்டர் ஸ்வேதா ஸ்ரீதர், கீதா சவுந்தர ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.
மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.



