உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆரோக்கிய மான இனிப்பு மற்றும் உணவுகளை சாப்பிட ஊட்டச்சத்து நிபுணரும் ஆரோக்கிய ஆலோசகருமான ஷீலா கிருஷ்ணசாமி சில ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.
கிறிஸ்துமஸ் இனிப்புகளில் நீங்கள் சேர்க்க வேண்டிய மூன்று அற்புதமான ஆரோக்கியமான பொருட்கள் குறித்து அவர் தெரிவித்துள்ளார்.
உங்கள் கிறிஸ்துமஸ் இனிப்புகளுக்கு பாதாம் கூடுதல் சுவையை அளிக்கும். இதில் வைட்டமின் ஈ, மெக்னீசியம், புரதம், ரிபோப்ளேவின் மற்றும் துத்தநாகம் போன்ற 15 க்கும் மேற்பட்ட ஊட்டச் சத்துக்கள் உள்ளன.
மேலும் பாதாம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து உடலுக்கு மிகுந்த ஆரோக்கி யத்தை அளிக்கிறது. எனவே உங்களின் கிறிஸ்துமஸ் இனிப்புகளில் பாதாம் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு பரிசு அளிப்பதற்கும் சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பரிசுப் பொருளாக பாதாம் இருக்கும்
பிஸ்கெட் தயாரிப்பது என்பதை சிலர் கிறிஸ்துமஸ் பாரம்பரியமாக கொண்டுள் ளனர். அவ்வாறு மைதா மற்றும் வெள்ளை சர்க்கரை போன்ற பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் பிஸ்கெட்களில் போதிய ஊட்டச்சத்துகள் இருப்பதில்லை.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பிஸ்கெட்டை, சற்று மாறுதலாக மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் தரும்
வகையில் மைதாவிற்கு பதில் ஓட்ஸ், வெள்ளை சர்க்கரைக்கு பதில் வெல்லத்தையும் சேர்த்து சிறிது பாதாம் பருப்பை துண்டு துண்டாக வெட்டி அதில் சேர்த்து பிஸ்கெட் தயாரிக்கும் போது அவை ருசி மிகுந்ததாகவும் உடலுக்கு ஆரோக்கிய மானதாகவும் இருக்கும். மேலும் தீயில் சுடாத இந்த பிஸ்கெட்டை விரைவாக தயாரிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.