fbpx
Homeபிற செய்திகள்கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 884 வீடுகள் கட்டித்...

கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 884 வீடுகள் கட்டித் தரப்பட்டன: செய்தியாளர்கள் பயணத்தில் கலெக்டர் தங்கவேல் தகவல்

கரூர் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின்கீழ் 2 ஆண்டுகளில் 884 வீடுகள் ரூ.30.94 கோடி மதிப்பீட்டில் கட்டி தரப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்தார்.

கரூர் மாவட்டஆட்சியர் மீ.தங்கவேல் நேற்று (19ம் தேதி) க.பரமத்தி ஊராட்சி ஒன் றியம், குப்பம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் பய னாளிகளுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளை நேரில் பார்வை யிட்டு செய்தியாளர் பயணத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்விற்குப் பின் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை வருகின்ற 2030ம் ஆண்டிற்குள் குடிசை இல்லாத மாநிலமாக உருவாக்குவதற்காக ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் குடிசையில் வசிக்கும் ஏழை எளியோர்க்கு கான்கிரீட் வீடு கட்டுவதற்காக கலைஞரின் கனவு இல்லம் எனும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டின் அமைப்பு வரவேற்பறை, சமையலறை, படுக்கை அறை மற்றும் கழிப்பறையுடன் சேர்த்து ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 300 சதுரஅடி பரப்பளவில் சிமெண்ட் கான்கிரீட் கூரையுடனும், மீதமுள்ள 60 சதுரஅடி பயனாளியின் விருப்பப்படி தீப்பிடிக்காத வேறுவகையான கூரையுடன் அமைத்துக் கொள்ளலாம்.

கலைஞரின் கனவுஇல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகள் கூடுதல் வசதிகள் செய்ய 50,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை கூட்டுறவு வங்கிகள் மூலம் கடனுதவி பெற உதவிகள் செய்யப்படும். இத்திட் டத்தில் பயன்பெற விரும்பும் பய னாளிகள் ஊரகப்பகுதிகளில் வசிக்க வேண்டும்.

சொந்தமாக வீட்டுமனைப் பட்டா வைத்திருக்க வேண்டும். கூட்டுப்பட்டாவாக இருந்தால், தனிப்பட்டாவாக மாற்றியபின் விண்ணப்பிக்கலாம். வீட்டின் கூரை ஆர்.சி.சி கூரையாக அமைக்கப்பட வேண்டும். ஓலை அல்லது ஆஸ்பெட்டாஸ் சீட்டை பயன்படுத்தக்கூடாது.

கிராம ஊராட்சிகளில் உள்ள 5 உறுப்பினர்கள் கொண்ட தேர்வுக்குழு (ஊராட்சிமன்ற தலை வர், பணி மேற்பார்வையாளர், உதவிபொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்) மூலம் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு கிராம சபைக் கூட்டங்களில் வைத்து ஒப்புதல் பெற்ற பின்னர் மாவட்ட ஆட்சியர் மூலம் வீடு கட் டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்படும்.

பயனாளிகள் தனிப்பட்ட முறையில் இதற்காக விண்ணப்பிக்கத் தேவையில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் வங்கிக்கணக்கிற்கு வீடு கட்டுவதற்கான நிதி அரசின் சார்பில் நேரடியாக செலுத்தப்படும்.

கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான நிரந்தரமான வீடுகளை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும், சமத்துவமான கிராமப்புற வளர்ச்சியையும் உறுதி செய்யமுடியும்.

அந்த வகையில் கரூர் மாவட் டத்தின் 8 ஊராட்சி ஒன்றி யங்களில் உள்ள 157 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் 2024-25ஆம் ஆண்டில் 742 வீடுகள் ரூ.25.97 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் 2025-26ஆம் ஆண்டில் 703 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 142 வீடுகள் ரூ.4.97 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 561 வீடுகள் ரூ.19.63 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கரூர் மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 884 வீடுகள் ரூ.30.94 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் இத்திட்டம் குறித்து அறிந்து கொள்ள தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கிராம ஊராட்சி அலுவலகத்தையோ அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் செய்தியாளர் பயணத்தில் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.வீ.ரெ.வீரபத்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரபாண்டியன், தேன்மொழி மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img