fbpx
Homeபிற செய்திகள்ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டி- ஈக்வைன் ட்ரீம்ஸின் ஹன்சிகா தங்கம் வென்றார்

ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டி- ஈக்வைன் ட்ரீம்ஸின் ஹன்சிகா தங்கம் வென்றார்

போபாலில் நடைபெற்ற ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப்பில் (JNEC- 2022) கோவை ஈக்வைன் ட்ரீம்ஸைச் சேர்ந்த 13 வயது ஹன்சிகா சீனிவாசன், தங்கப் பதக்கத்தை (அணி) வென்று தமிழகத்தை பெருமைப்படுத்தினார்.

கோவையில் 8-ம் வகுப்பு படித்து வரும் ஹன்சிகா, தனது 9-வது வயதில் ஈக்வின் ட்ரீம்ஸ் என்ற ரைடிங் பள்ளியில் குதிரை சவாரி பயிற்சி பெற்றுவந்தார்.

ஹன்சிகா தனது பயிற்சிக்காக தினமும் காலை 5 மணிக்கு 6 கிலோ மீட்டர் பயணம் செய்கிறார். கடந்த ஆண்டுகளில் பலவிதமான குதிரைகளை சவாரி செய்த ஹன்சிகா, ஒவ்வொரு குதிரையின் குணத்தையும் புரிந்துகொண்டு அதிலிருந்து கற்றுக்கொள்ளும் திறனைப் பெற்றுள்ளார்.

ஜேஎன்இசி

கடந்த மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு ஜேஎன்இசியிலும் பங்கேற்ற பிறகு, 2022ல் ஹன்சிகா தனது முதல் தங்கப் பதக்கத்தை (அணி) வென்றார். கடுமையான பயிற்சியும் அவரை இந்த ஆண்டு ஜேஎன்இசியில் சக்திவாய்ந்த போட்டியாளராக மாற்றியது.

அவர் வெற்றியை தலைமைப் பயிற்சியாளரான சக்தி பாலாஜிக்கு அர்ப்பணித்தார்.
ஹன்சிகா கூறுகையில், எனக்கு வழிகாட்டியாகவும், சிறந்த ரைடர் ஆகவும் உதவினார் சக்தி பாலாஜி. அவரது வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியால் போட்டியில் வெல்வது எளிதாக இருந்தது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img