Homeபிற செய்திகள்சட்டம் ஒழுங்கு சீர்கேடு- விலைவாசி உயர்வை கண்டித்து திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்கோவையில் மாணவரணி மாநில செயலாளர்...

சட்டம் ஒழுங்கு சீர்கேடு- விலைவாசி உயர்வை கண்டித்து திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்கோவையில் மாணவரணி மாநில செயலாளர் வீரமணி பங்கேற்பு

தவெக ஆட்சியில், பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவையில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக மகளிரணி சார்பில் செஞ்சிலுவை சங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத் திற்கு, கோவை மாவட்ட மகளிர் தொண்டரணி மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி அமைப்பா ளர்கள் அன்னம்மாள், கனிமொழி, ரங்கநாயகி, ஜெயலலிதா, கவிதா ஆகி யோர் தலைமை தாங்கினர்.
கோவை மாவட்ட திமுக செயலாளர்கள் துரை. செந்தமிழ் செல்வன், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆயி ரக்கணக்கானோர் பங்கேற் றனர். திமுக மாணவரணி மாநில செயலாளர் வீர மணி, தலைமை கழக பேச் சாளர் கலாவதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய வீரமணி, விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் செல்வதாகக் குற்றம் சாட்டினார். குழந்தைகளின் பாதுகாப்பு குறித்துப் பேசும்போது, சிறு குழந் தைகள் கடத்தப்படும் சம்ப வங்களைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதாக விமர் சித்தார். மேலும், தேனி மற்றும் கோவையில் காவல்துறையினரின் பிடியிலிருந்து கைதிகள் தப்பிய சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், காவல்துறையின் செயல் பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தில் பல்வேறு வகையான ரகரகமான குற்றவாளிகள் இருப்பதாக விமர்சித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்களில் தவெக நிர்வாகிகள் சிலர் தொடர்புடையவர்கள் என்றும் குற்றம்சாட்டினார். கட்சியின் நிதி தொடர் பாக வும் கேள்விகளை எழுப்பிய அவர், கொள்ளை, லஞ்சம், கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறினார். அமைச்சர் ஆனந்த் அரசு வழக்கறிஞருக்கு பணம் கொடுத்ததாகக் கட்சி யினரே புகார் தெரிவிப்ப தாகவும் அவர் குறிப்பிட் டார். மேலும், வெளிப்புறத் தோற்றத்தையும் கவர்ச்சியை யும் மட்டும் வைத்து ஒருவர் சிறந்த ஆளுமையாகிவிட முடியாது என்று தமிழக முதல்வர் விஜய்யை விமர்சித்த வீரமணி, வாக் காளர்கள் கவர்ச்சியின் அடிப்படையில் வாக்களித் ததால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். ஒவ் வொரு துறையிலும் நிர்வாகச் சீர்கேடு நிலவுவ தாகவும் அவர் தெரிவித்தார். பெரியார் அறிவுலகத்திற்குச் சென்று படித்துத் தெரிந்துகொள்ளுமாறு தவெகவினருக்கு அறிவுறுத் தினார்.செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசிய வீரமணி தீபாவளி பண்டி கையை முன்னிட்டு பொது மக்கள் எதிர் கொள் ளும் பொருளாதாரச் சுமை களைச் சுட்டிக்காட்டி பட்டாசுகளே வாங்க வேண்டாம், அனைத்தும் ‘பிளாஸ்ட், பிளாஸ்ட்’ எனக் குறிப்பிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img