fbpx
Homeபிற செய்திகள்ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி தேசிய தரவரிசை பட்டியலில் 4வது இடம்

ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி தேசிய தரவரிசை பட்டியலில் 4வது இடம்

2024ம் ஆண்டிற்கான உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் அரங்கில் மத்திய கல்வி அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதில் வெளியிடப்பட்ட பார்மசி கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஊட்டியில் உள்ள ஜெஎஸ்எஸ் பார்மசி கல்லூரி கடந்த ஆண்டு வகித்த 4வது இடத்தை இந்த ஆண்டும் தக்கவைத்து நாட்டின் தலைசிறந்த 5 பார்மசி கல்லூரிகளில் ஒன்றாக மீண்டும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளது.

மேலும் ஜெ.எஸ்.எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்விக் கழகத்தின் அங்கங்களான மைசூரில் உள்ள ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி 6வது இடத்தையும், ஜெ.எஸ்.எஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் ஜெ.எஸ். எஸ் பல் மருத்துவ கல்லூரி முறையே 12வது மற்றும் 39 வது இடத்தையும் பெற்றுள்ளன. ஜெ.எஸ்.எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்விக் கழகம் 24வது இடத்தையும் பெற்றுள்ளது.

ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி, உதகை இந்த தரத்தை அடைவதில் அனைவரின் பங்கு உள்ளதாக முதல்வர் தனபால் பெருமிதம் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img