நாட்டில் சிறந்த மருந்தியல் கல்லூரிக ளுக்கான தரவரிசையில் ஊட்டி ஜே.எஸ்.எஸ். மருந்தியல் கல்லூரி நான்காம் இடத்தைப் பிடித்து தேசிய அளவில் பெருமை பெற் றுள்ளது. இந்த சிறப்பை முன்னிட்டு, சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற விருதளிப்பு மாநாட்டில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி.தனபாலி டம் சான்றிதழை வழங்கி கௌரவித்தார்.
இந்த தேசிய தரவரிசை, கற்பித்தல் மற்றும் கற்றல் வளங்கள் பல்வேறு அளவு கோல்களின் அடிப்படை யில் நிர்ண யிக்கப்பட்டது.
இந்த பெருமை நிகழ்வில், ஜே.எஸ்.எஸ். மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் கே.பி.அருண், பேராசிரியர்கள் சத்தியாரெட்டி, ஜூபி ஜவகர், கிருஷ்ண வேணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மகிழ்ச்சி தெரி வித்தனர்.
மருந்தியல் கல்வித் துறையில் தொடர்ந்து மேம் பட்ட தரத்தை வழங்கி வருவதை உறுதிப்படுத்திய இந்த சாதனை, நீலகிரி மாவட்டத்திற்கே பெருமை சேர்த்துள்ளது.



