கோவை எல்.சி. மருத்துவ அறக்கட்டளை யின் சமுதாயப் பணிகளின் அடுத்த முன்னெடுப்பாக பள்ளி மாணவ மாண விகளின் கழிப்பறை சுகாதாரத்திற்கான உப கரணங்கள் வழங்கி வருகின்றனர். எளிதில் கழிப்பறை சுத்தம் செய் யும் நவீன உபகரணம் வழங்கும் திட்டத்தில் இதுவரை 8 பள்ளிகள் பயனடைந்துள்ளன. கோவை ரத்தினபுரி அரசு உயர்நிலைப் பள்ளியில் எல்சி மருத்துவ அறக் கட்டளையால் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
புற்றுநோய் விழிப் புணர்வு மற்றும் பேரிடர் காலங்களில் தம்மால் இயன்ற உதவிகளை அளித்து வரும் எல்சி மருத் துவமனையின் டாக்டர் ராஜன், டாக்டர் வித்யா ராஜன் தம்பதியினர் பள்ளிகளில் கழிப்பறை சுகாதாரத்திற்காக எளிதில் சுத்தம் செய்யும் கம்ப்ரஸர் உபகரணத்தினை கழிப் பறை சுத்தம் செய்வதற்காக பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கிக் கொண்டு வருகின்றனர். இன்று மேட்டுப்பாளையத்தில் உள்ள வள்ளுவர் ஆரம்ப நிலை பள்ளியில் சிறு நீர் தொற்று மற்றும் கழிப்பறை சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய மருத்துவர் வித்யா, இந்த சிறப்பு உபகரணங்களைப் பள் ளிக்கு இலவசமாக வழங் கினார். அத்தோடு இன்று கோவை மாநகராட்சியின் நான் உயிர்க்காவலன் திட்டத்தின் சாலை பாது காப்பு உறுதி மொழி யையும் அப்பள்ளி குழந் தைகளை ஏற்கச் செய்தார்.



