கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற 2022ம் ஆண்டிற்கான ஸ்மார்ட் சிட்டி விருதுகள் வழங்கும் விழாவில் கோவை ஸ்மார்ட் சிட்டி பில்ட் எண்விரான்மென்ட் பிரிவில் முதல் பரிசு மற்றும் திட்ட செயல்பாட்டில் சிறந்த சீர்மிகு நகரங்களின் செயல்பாட்டிற்கான இந்தியாவின் தெற்கு மண்டலத்தில் முதல் பரிசு என இரு விருதுகளை இந்திய குடியரசு தலைவரிடமிருந்து பெற்றதை, மாநகராட்சி ஆணையாளர் பிரதாபிடம் மாநகராட்சி துணை ஆணையாளர் சிவகுமார், சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்று சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை ஒப்படைத்தார்கள்.
உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் செல்வசுரபி, சீர்மிகு நகர திட்ட பொது மேலாளர் பாஸ்கரன், உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், சரவணக்குமார் ஆகியோர் உள்ளனர்.