கோவை ஆர்.எஸ்.புரம் டி.வி சாமி சாலையில் எமரால்டு குழு நிறுவனங்களின் ஜூவல் ஒன் ஷோரூம் துவங்கப்பட்டது. இதற்கான துவக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த ஷோரூமில் வைர நகைகளுக்காக புளோரன்சியா என்ற பெயரிலும், பிரிமியம் சில்வர் நகைகளுக்காக ஜிலாரியா என்ற பெயரிலும் பிரத்யோக பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள பாரம்பரிய மிக்க நகை மாடல்கள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. திருமண முகூர்த்தம், நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகளில் மணப்பெண்களுக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஜூவல் ஒன் நகைகள் உள்ளது.

பிரிமியம் சில்வர் மற்றும் திருமண விழாக்களுக்கான ஜூவல்லரிக்கு 10 சதவீத தள்ளுபடி, எவரிடே நேச்சுரல் டைமண்ட் ஜூவல்லரிக்கு ஒரு காரட்டுக்கு, 15,000 ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.
இது குறித்து எமரால்டு குரூப் இயக்குனர் தியான்ஷக்தி சீனிவாசன் கூறுகையில், “நவ நாகரிகமாக தயாரிக்கப்பட்ட சில்வர் ஜூவல்லரி மற்றும் டைமண்ட் ஜூவல்லரி விற்பனை செய்கிறோம்.
சில்வர் மற்றும் டைமண்ட் ஜூவல்லரி, குறைந்த பட்சம், 500 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். பெண்கள் விரும்பும் வகையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடல்கள் இங்கு விற்பனைக்கு உள்ளது” என்றார்.
இந்நிகழ்ச்சியில் வணிக பிரிவு தலைவர் அந்தோணி அல்போன்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



