fbpx
Homeபிற செய்திகள்திருநெல்வேலியில் இயேசு அழைக்கிறார் பிரார்த்தனை திருவிழா

திருநெல்வேலியில் இயேசு அழைக்கிறார் பிரார்த்தனை திருவிழா

திருநெல்வேலி பிரான்சிஸ் சேவியர் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் இன்று, நாளை என 2 நாட்கள் இயேசு அழைக்கிறார் பிரார்த்தனை திருவிழா நடைபெறு கிறது. கூட்டம் தினமும் மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் இயேசு அழைக்கிறார் ஸ்தாபகரும், காருண்யா பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர்.பால் தினகரன் மற்றும் இவாஞ்சலின் பால் தினகரன், ஸ்டெல்லா ரமோலா, டேனியல் டேவிட்சன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு நற்செய்தி வழங்குகிறார்கள்.

இதில் தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டல பேராயர் பர்னபாஸ், பிரான்ஸிஸ் சேவியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் கிளிட்டஸ், தமிழ்நாடு அரசு கிறிஸ்தவ சபை உபதேசியார்கள் பணியாளர்கள் வாரியத்தின் தலைவர் டாக்டர் விஜிலா சத்தியானந்த், பெந்தகோஸ்தே திருச்சபைகளின் மாமன் றம் திருநெல்வேலி பேராயத்தின் தலைவர் மனோஸ், மற்றும் மூத்த போதகர்கள் ரத்தினம் பால், கிளாரன்ஸ் மருதையா, ராஜன் எட்வர்ட் ஆகியோர் தலைமையேற்று நடத்துகிறார்கள்.

இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை டாக்டர் ராஜ் குமார் ஞானமுத்து, டாக்டர் சகுந்தலா ராஜ்குமார். பேராசிரியர் டாக்டர் ஜான் கென்னடி, டாக்டர் சாம் தேவசகாயம் மற்றும் அனைத்து சபை பெரியோர்கள் ஒருங்கிணைந்து செய்து வருகிறார்கள்.

படிக்க வேண்டும்

spot_img