fbpx
Homeபிற செய்திகள்சகஜானந்தா அடிகளாரின் 66வது நினைவு நாள் விழா

சகஜானந்தா அடிகளாரின் 66வது நினைவு நாள் விழா

சுவாமி சகஜானந்தா அடிகளாரின் 66வது நினைவு நாள் மற்றும் உழைப்பாளர் தின விழா நந்தனார் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் டாக்டர் கே.ஐ. மணிரத்தினம் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சமாதியில் அபிஷேகம் ஆராதனை செய்து அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்பாக சாமியின் உருவ சிலைக்கு தலைவர் டாக்டர் கே.ஐ.மணிரத்தினம் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் நந்தனார் கல்விக் கழகத்தின் செயலாளர் திருவாசகம், டிரஸ்ட் செயலாளர் வினோபா கல்வி கழக பொருளாளர் ஜெயச்சந்திரன், கல்வி கழகத்தின் முன்னாள் பொருளாளர் இளைய அன்பழகன் மற்றும் கல்வி கழக உறுப்பினர்கள் ரத்தினசாமி, சின்னதுரை, ரங்கநாதன், பாலையா, பக்தவாசலம், நெடுஞ்செழியன், மணிவேல், விஸ்வநாதன் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் முன்னாள் வட்டார தலைவர் தமிழரசன், கஜேந்திரன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மணலூர் ரவி, ஆதிதிராவிடர் மகாஜன சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சுரேஷ்குமார், இன்ஜினியர் ஏகலியமூர்த்தி, நந்தனார் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் மனோகரன், வக்ரா மேரி ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img