சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு சிதம்பரம் இந்திய தொழுநோய் சேவை நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் செயற்கை கால்கள் வழங்கப்பட்டது.
இந்த விழாவை மருத்துவர் வி.கதிரவன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கபில் ஜெயின், ஆதித்ய நாராயணன், பிரபு, தன்னார்வலர் கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் கால் இழந்த 10க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இலவச செயற்கை கால் பொருத்தப்பட்டது. மேலும் 20 நபர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
தொழுநோய் நிறுவனத்தின் செயற்கை அபயம் மற்றும் முட நீக்கியல் வல்லுனர் சி.நீதியரசன் மற்றும் சிறப்பு காலணி கைவினைஞர் எஸ்.ஆகாஷ் உதவி உபகரணங்களை வடிவமைத்திருந்தனர்.
மருத்துவர் சி.சௌமியா மாற்றுத் திறனாளிகளுக்கான கால்களை 3டி தொழில்நுட்ப ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்தார்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் பி.ஜான்சி ராணி ஏற்பாடு செய்திருந்தார்.
நிறுவனத்தின் செயல்முறை மருத்துவர் மற்றும் திட்ட மேலாளர் ஜி. மணிவண்ணன் தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



