fbpx
Homeபிற செய்திகள்முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரசாரம் தொடங்கினார்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரசாரம் தொடங்கினார்

அதிமுக கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் தொகுதியில் உள்ள கோடங்கிபட்டியில் உள்ள பட்டாளம்மன் கோயிலில் நேற்று காலை வழிபாடு நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த துண்டறிக் கைகளை பொதுமக்களிடம் வழங்கி அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்பே தனது தேர்தல் பரப்புரையை அவர் தொடங்கி விட்டார்.

படிக்க வேண்டும்

spot_img