fbpx
Homeபிற செய்திகள்கூடைப்பந்து போட்டியில் ஈரோடு பாரதி வித்யாபவன், ராஜேந்திரா பள்ளிகள் முதலிடம்

கூடைப்பந்து போட்டியில் ஈரோடு பாரதி வித்யாபவன், ராஜேந்திரா பள்ளிகள் முதலிடம்

ஈரோடு மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பாக ஈரோடு மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான கூடைப் பந்துபோட்டி நடைபெற்றது. இப்போட்டி இஷான் கூடைப்பந்து அகாடமியில் திண்டல்மேடு பகுதியில் உள்ள இரண்டு மைதானத்திலும் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிறந்த 8 அணிகள் இரு பிரிவிலும் கலந்து கொண்டன. போட்டியை ஈரோடு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாலமன் தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் திண்டல் பாரதி வித்யா பவன் பள்ளி, சாரதா மெட்ரிக் பள்ளி, ராஜேந்திரா மெட்ரிக் பள்ளி, கீதாஞ்சலி பள்ளி ஆகியன முதல் நான்கு இடங்களைப் பிடித்தன.

மாணவியர் பிரிவில் ராஜேந்திரா மெட்ரிக் பள்ளி சி.எஸ். அகாடமி பள்ளி, சாரதா மெட்ரிக் பள்ளி, ஈரோடு மாவெரிக்ஸ் அணி ஆகியவை முதல் நான்கு இடத்தை பிடித்தன.

வெற்றிப்பெற்ற அணியினருக்கு, ஈரோடு மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் மருத்துவர் கே.சுதாகர், துணைத் தலைவர் சுதா மருத்துவ மனை எஸ்.பிரதீபா, செயலாளர் கோபிநாத், பொருளாளர் பி.வருண் பரிசுகளை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img