கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பிராந்திய அலுவலகத்தில் 79 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
வங்கியின் பொது மேலாளர் க.வேலாயுதம் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்வில் உதவி பொது மேலாளர்கள், முதன்மை மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.