தர்மபுரி மாவட்டம், நியூ ஹோம் பவுண்டேஷன் தொண்டு நிறுவனம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைதி ஆணையம் இணைந்து நடத்தும் ஏழை மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா தர்மபுரி கார்னர் ஸ்டோன் மையத்தில் நடைபெற்றது.
இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 50 மாற்றுத் திறனாளி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெற்றோருடைய பிள்ளைகள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு கல்வி உபகரணங்கள் தொண்டு நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சர்வதேச மனித உரிமைகள் அமைதி ஆணையத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் ஜான் பிரபு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னாள் ஆசிரியர் பிரைட் சாமுவேல் கல்வியின் முக்கியத்துவத்தை குறித்து மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் புகழேந்தி இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். உதவியைப் பெற்ற அனைத்து மாணவர்களும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்றி செலுத்தினர்.



