கோவை ஜெம் செவிலியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஜெம் துணை மருத்துவ அறிவியல் கல்லூரியின்(கோயம்புத்தூர் ஜெம் மருத்துவமனை குழுமத்தின் ஒரு அங்கம்) பிஎஸ்சி செவிலியர் 13-வது தொகுதி மற்றும் துணை மருத்துவ அறிவியல் 3-வது தொகுதி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று (ஜூலை 1) ஜெம் செவிலியர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில் 62 பிஎஸ்சி செவிலியர் பட்டதாரிகள், 6 பிஎஸ்சி ஓடிடி (ஆபரேஷன் தியேட்டர் & அனஸ்தீசியா டெக்னாலஜி) பட்டதாரிகள் மற்றும் 4 பிஎஸ்சி மருத்துவ உதவியாளர் பட்டதாரிகள் உட்பட மொத்தம் 72 மாணவர்களுக்கு பட்டமளிப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.பட்டம் பெற்ற மாணவர்கள் தமிழ்நாடு, பெண் மற்றும் வட இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனைகளில் பல்வேறு பதவிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. இதுவரை இந்தக் கல்லூரி யிலிருந்து சுமார் 700 மாணவர்கள் பிஎஸ்சி செவிலியர் படிப்பையும், சுமார் 40 மாணவர்கள் துணை மருத்துவ அறிவியல் படிப்புகளையும் முடித்துள்ளனர்.
கல்லூரி முதல்வர் டாக்டர் லிசி ரவீந்திரன் வரவேற்புரை ஆற்றினார். ஜெம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரபா பிரவீன் ராஜ் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். ஜெம் மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பிரவீன் ராஜ் தலைமை தாங்கி உரையாற்றினார். கோவை ஜெம் மருத்துவமனையின் புற்றுநோய் மைய மருத்துவ இயக்குநர் மற்றும் பிரிவு தலைவர் டாக்டர் பரத் ரங்கராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பட்டதாரிகள் தங்கள் தொழிலை நேர்மையுடன் கடைபிடிப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ஒவ்வொரு பாடப்பிரிவிலிருந்தும் ஒரு மாணவருக்கு சிறந்த மாணவி விருது வழங்கப்பட்டது. பட்டதாரிகள், அவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.
கல்லூரியின் துணை முதல்வர் டெபோரா பாக்ய ஜோதி நன்றியுரை ஆற்றினார்.



