fbpx
Homeபிற செய்திகள்தேசிய மருத்துவர்கள் தின விழா: 14 மருத்துவர்களுக்கு விருதுகள்

தேசிய மருத்துவர்கள் தின விழா: 14 மருத்துவர்களுக்கு விருதுகள்

அசோசியேசன் ஆப் அலையன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் மாவட்டம் 250-எஸ் மற்றும் வி.ஜி.எம் அறக்கட்டளை சார்பில் தேசிய மருத்துவர்கள் தின விழா கோவையில் சிறப்பாக நடைபெற்றது.
கோவை வி.ஜி.எம் மருத்துவமனை அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு அலையன்ஸ் மாவட்ட ஆளுநர்சந்திரம் தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதார இணை இயக்குநர் டாக்டர் வி.சுமதி விழாவைத் தொடங்கி வைத்தார். வி.ஜி.எம் ஃபவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் மற்றும் சர்வதேச அலையன்ஸ் சங்கத்தின் இயக்குநர் என்.ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும், கோவை மாவட்டத்தில் சிறந்த மருத்துவ சேவை புரிந்த 14 மருத்துவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் சிறப்பு மருத்துவர்கள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.


விழாவில் சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் அலையன் குணசேகரன், அலையன் விஜயகுமார், அலையன் டி.ஸ்ரீனிவாசன் மற்றும் அலையன் ராஜேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வி.ஜி.எம் மருத்துவமனையின் எம்.டி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுமன் அனைவரையும் வரவேற்றார். விழாவின் முடிவில் அலையன்ஸ் மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் அலையன்ஸ் எஸ். பிரபாகரன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் வி.ஜி.எம் மருத்துவமனையின் டாக்டர் சுமன், டாக்டர் மதுரா பிரசாத், டாக்டர் மித்ரா பிரசாத், டாக்டர் வம்சி மூர்த்தி உள்ளிட்டோர் மற்றும் அலையன்ஸ் சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் ரவீந்திரன், ராய் தாமஸ், அமைப்புச் செயலாளர் பாலசுப்பிரமணியம், தலைவர் டாக்டர் சுதாகர் ஜெயங்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அலையன்ஸ் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img