கோவை நீலாம்பூரில் யூகோ வங்கியின் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. கோவை மண்டலத்தில் இது வங்கியின் 69வது கிளை ஆகும். நவீன வசதிகளுடன் கூடிய இக்கிளையை யூகோ வங்கியின் நிர்வாக இயக்குனரும் முதன்மை செயல் அலுவலருமான அஸ்வனி குமார், காணொளி காட்சி மூலம் நேற்று (ஆகஸ்ட் 14) திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நீலாம்பூர் வங்கி கிளையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குத்து விளக்கேற்றி வைத்தார்.
நிகழ்வில் வங்கியின் மண்டல மேலாளர் ஸ்ரீனிவாச ராவ், சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன், கதிர் கல்லூரி தலைவர் கதிர், செயலாளர் லாவண்யா கதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏராளமான வாடிக்கையாளர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.



