இண்டியன் இன்ஸ்டிடூட் ஆப் இன்டீரியர் டிசைனர்ஸ் (ஐஐஐடி) கோயம்புத்தூர் மையத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி கோவையிலுள்ள ரேடிஸன் புளூ ஓட்டலில் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஐஐஐடி தேசிய தலைவர் ஜிக்னேஷ் மோடி கலந்து கொண்டு ஆஷிஷ் ரைச் சுராவை ஐஐஐடி கோவை மையத்தின் புதிய தலைவராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில், ஐஐஐடி-யின் முன்னாள் தலைவர் ஸ்ரீநீ ஆஷிஷ் ரைச்சுரா வரவேற்புரை ஆற்றினார்.
பின்னர் அவர் பொறுப்பில் இருந்த 2023-&2025 காலத்தில் நடந்தப்பட்ட திட்டங்கள், நிகழ்ச்சிகள், புரிந்த சாத னைகள் ஆகியவற்றின் வீடியோ காட்சியை திரையிட்டார்.
புதிய தலைவர் ஆஷிஷ் ரைச்சுரா புதிய பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.
தனது சிறப்புரையில் ஜிக்னேஷ் மோடி கோயம்புத்தூர் மையத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீ ரைச்சுரா பதவி காலத்தில் புரிந்த சாதனைகளை பாராட்டி பேசினார்.
தேசிய அளவில் வளரச்சி ஏற்படுவதற்கு இன்டீரியர் டிசைனர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றார்.
ஆஷிஷ் ரைச்சுரா தனது ஏற்புரையில், அனைவரும் இணைந்து சிறப்பாக செயல் பட்டு, கோயம்புத்தூர் ஐஐஐடி மையத்தின் உயர்ந்த இலக்குகளை அடையவேண்டும் என்றார்.
புகழ்பெற்ற கட்டிட கலை நிபுணரும், கிரியேட்டிவ் குழுமத்தின் நிறுவனருமான பேராசிரியர் சரண்ஜித் சிங் ஷா கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
சமையல்கலை வல்லுநர் தான் சமைக்கும் நேர்த்தியான மற்றும் பிரத்யேகமான உணவுகளுக்குத் தேவையான பொருட்களை மிகுந்த கவனத்து டன் தேர்ந்தெடுப்பது போல, ஆர்க்கிடெக்டுகள் கட்டுமானப் பொருட்களை கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.
ஐஐஐடி கோயம்புத்தார் மையத்தின் புதிய நிர்வாகிகள் (2025-2027) ஆஷிஷ் ரைச்சுரா தலைவர், நிர்மல் குமார் துணைத் தலைவர், கே.ராஜ கோபாலன் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளவர், ஏ.நாகப்பன் கவுரவ செயலாளர், சாதிஷ் மூசா பொருளாளார், அதன் மேலாண்மை குழு உறுப்பினர்கள் பிஸ்வஜித் பால், ரூபஸ்ரீ பர்வதிகார் மற்றும் சைலேஷ் கோல்ச்சா, கூட்டு உறுப்பினர்கள் தருனீஷ் மற்றும் ராஜேந்திர சரப் ஆகியோர் ஆவர்.



