இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் 113வது ஆண்டு தினத்தையொட்டி, டெல்லி சுஷ்மா சுவராஜ் பவனில் DHR – ICMR சார்பில் சுகாதார ஆராய்ச்சிக்கான சிறப்பு மாநாடு 2024 நடைபெற்றது.
இதில் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும், டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் நிர்வாக இயக்குனருமான டாக்டர் ஆர் எம் அஞ்சனாவுக்கு “சிறந்த ஆராய்ச்சிக்கான விருதை” இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வழங்கியது. இந்த விருதை மத்திய சுகாதாரம் – குடும்ப நலம் மற்றும் ரசாயனங்கள் – உரங்கள் துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் வழங்கினார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் லான்செட் நீரிழிவு மற்றும் உட்சுரப்பியல் இதழில் டாக்டர் அஞ்சனா எழுதிய ICMR-INDIAB என்னும் ஆராய்ச்சி கட்டுரைக்காக இந்த மதிப்புமிக்க விருது அவருக்கு வழங்கப்பட்டது.
டாக்டர் அஞ்சனா சுமார் 400க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் 81 h-index ஆகியவற்றை எழுதியுள்ளார். இவர் மேலும், பல தேசிய மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளால் நாட்டின் மிக இளம் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளில் ஒருவ ராக கவுரவிக்கப்பட்டுள்ளார்.