இந்தியாவின் முன்னோடியான அவ்தார் குழுமம், 2024ம் ஆண்டுக்கான அவ்தார் – செரமவுண்ட் Social Excellence Award மற்றும் Male Ally Legacy Awards ஆகியவற்றின் வெற்றியாளர்களை அறிவித்தது.
சென்னையில் DEI பற்றிய இந்தியாவின் மிகவும் மரியாதைக்குரிய மாநாடான அவ்தார் மற் றும் செரமவுண்ட் Best of the Best Conference 2024-இன் எட்டாவது மாநாட்டில் இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், அவ்தார் – செரமவுண்ட் Social Excellence Award என்பது விண்ணப்பித்துள்ள நிறுவனங்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக விளைவு முயற்சியைக் கண்டறிந்து கொண்டாடி அங்கீகாரமளிக்கும் திட்டமாகும்.
இந்த விருது, Bosch Limited நிறுவனத்திற்கு அவர்களது தாழ்த்தப்பட்டோருக்கான Employment linked Short Term Skilling Programs திட்டங்களுக்காக வழங்கப்பட்டது.
PrismOfDiversity என்ற கருப்பொருளில், he Best Practices of the Best Conference (BOB) 2024-இன் எட்டாவது தொடர்ச்சியான மாநாடு, புதுமைகளை உருவாக்குவதற்கும், படைப்பாற்றலை வளர்ப்பதற்கும் மற்றும் பணியாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் ஒன்றிணைந்த DEI எவ்வாறு சக்திவாய்ந்த கருவியாக மாறுகிறது என்பது குறித்த உரையாடல்களை முன் வைத்தது.
இது குறித்து அவ்தார் குழுமத்தின் நிறுவன தலைவர் டாக்டர் சவுந்தர்யா ராஜேஷ் கூறுகையில், “சமூக ரீதியான தாக்கத்தை உருவாக்குவதற்கும், சமூக ரீதியாக அனைவரையும் உள்ளடக்குவதை செயல்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ள நிறுவனங் களின் மீது கவனத்தை ஈர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்“ என்றார்.