சுந்தரம் பைனான்ஸ் லிமிடெட் பொங்கல் திரு நாளை யொட்டி வர்த்தக வாகனங்களுக்கான பொங்கல் அழகு போட் டியை பொள்ளாச்சி மற்றும் பவானி நகரில் நடத்தியது. இதில் டிரக்குகளின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டு நர்கள் உட்பட 45 வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். சுந்தரம் சங்கமம் என்ற பெயரில் நடத் தப்பட்ட இந்நிகழ்வில் 14 டிரக்குகள் அழகாக அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதில் PA கல்லூரியின் சேர்மன் அப்புக்குட்டி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் ஆரிஃப், என்&எம் நிறுவனத்தின் மேலாளர் ஸ்ரீதர் மற்றும் பொள்ளாச்சி லாரிகள் சங்கத்தின் தலைவர் காட்டுராஜா ஆகியோர் இப்போட்டியின் நடுவர்களாக இருந்தனர்.
வாகனங்களின் பராமரிப்பு நிலை, தூய்மை மற்றும் அலங்காரம் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் அனைத்து வாகனங்களையும் நடுவர்கள் குழு மதிப்பாய்வு செய்து அவற்றிலிருந்து மூன்று வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.
இதில் முதல் வெற்றியாளராக பாலாஜி கிருஷ்ண குமார் தேர்வானார். இப்போட்டியில் வெற்றிவாகை சூடியவர்களுக்கு சிறப்பான பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.