fbpx
Homeபிற செய்திகள்இந்தியா சிமெண்ட்ஸ் புரோ சாம்பியன்ஷிப் கோல்ஃப் போட்டி

இந்தியா சிமெண்ட்ஸ் புரோ சாம்பியன்ஷிப் கோல்ஃப் போட்டி

இந்தியா சிமெண்ட்ஸ் புரோ சாம்பியன்ஷிப் 2023, கோல்ஃப் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சர் நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் இந்தியாவில் தொழில்முறை கோல்ஃப் போட்டிகளுக்கு அனுமதியும் அங்கீகாரமும் வழங்கும் அதிகாரப்பூர்வ அமைப்பான புரொஃபஷனல் கோல்ஃப் டூர் ஆஃப் இந்தியா (PGTI), ஆகியவை ஒருங்கிணைந்து வரும் 19-ம் தேதி வரை தமிழ்நாடு கோல்ஃப் ஃபெடரேஷனின் (TNGF) காஸ்மோ கோல்ஃப் கோர்ஸ் மைதானத்தில் கோல்ஃப் போட்டியை நடத்துகிறது.

தொழில்முறை ரீதியிலான இப்போட்டியில் மொத்தத்தில் ரூ.50 லட்சம் என்ற பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் என். ஸ்ரீனிவாசன் கூறியதாவது:
சென்னையில் கோல்ஃப் விளையாட்டிற்கான மைதானத்தை உருவாக்குவதற்கும் மற்றும் கோல்ஃப் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்துவதற்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் கணிசமான பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வந்திருக்கிறது.

கோல்ஃப் விளையாட்டில் ஆர்வம் கொண்ட நபர்களுக்கு பயிற்சியளிக்க ஒரு கோல்ஃப் அகாடமியையும் உருவாக்கி நடத்தி வருகிறது என்றார்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை சந்தையாக்கல் அதிகாரியும் மற்றும் தீவிர கோல்ஃப் விளையாட்டு வீரருமான பார்த்தசாரதி ராமானுஜம் பேசுகையில், தமிழ்நாடு கோல்ஃப் ஃபெடரேஷன் வழியாக, கோல்ஃப் விளையாட்டிற்கும் மற்றும் கோல்ஃப் வீரர்களையும் உள்ளடக்கிய பல்வேறு விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் தொடர்ந்து பங்களிப்பை செய்து வருகிறது என்றார்.

சென்னையில் நடைபெறும் இப்போட்டி நிகழ்வில் 123 தொழில்முறை (புரொஃபஷனல்) விளையாட்டு வீரர்கள் மற்றும் மூன்று அமெச்சூர்கள் உட்பட, 126 கோல்ஃப் வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img