எல்ஜி தொழிற்பயிற்சிப் பள்ளி (EVTS) தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் கம்யூனிட்டி காலேஜ் உடன் இணைந்து, உற்பத்தித் தொழில்நுட்பத்தில் தேசிய திறன் தகுதி கட்டமைப்பின் (NSQF) கீழ் மூன்றாண்டு இளங்கலை தொழில் (B.Voc) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
உற்பத்தித் துறையில் வெற்றிகரமான வாழ்க்கைக்கு தேவையான நடைமுறை திறன்கள் மற்றும் தத்துவார்த்த அறிவுடன் மாணவர்களைத் தயார்படுத்துவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
எல்ஜி ஏர் சென்டர் ஆலையில் நடைபெற்ற துவக்க விழாவில், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.கிருஷ்ணன், எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜெய்ராம் வரதராஜ் ஆகி யோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர்கள், எல்ஜி-யின் மூத்த நிர்வாகக் குழு மற்றும் எல்ஜி தொழிற்பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த தனித்துவமான கூட்டாண்மையின் கீழ், தோராயமாக 200 மாண வர்கள் தொழிற்கல்வி படிப்பை தொடர வாய்ப்பு கிடைக்கும்.
CUTN இன் சமூகக் கல்லூரி, EVTS மூலம், பாடத்திட்டத்தின் தத்துவார்த்த கூறுகளை வழங்கும், அதே நேரத்தில் எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் அதன் அதி நவீன வசதிகளில் திறன் அடிப்படையிலான பயிற்சியில் 70% வழங்கும்.
மூன்றாண்டு படிப்பை வெற்றிகரமாக முடித்தவுடன், அனைத்து மாணவர்களும் எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் மூலம் ஊழியர்களாக பணியமர்த்தப்படுவர்.