Homeபிற செய்திகள்தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை மீட்ட லைப் கார்ட்ஸ் குழு

தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை மீட்ட லைப் கார்ட்ஸ் குழு

மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நாள்தோறும் பக்தர்களின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் நேற்று மாலை வனபத்ரகாளியம்மன் கோவில் பவானி ஆற்றில் வயதான மூதாட்டி ஒருவர் திடீரென பாலத்தின் மீதிருந்து ஆற்றில் குதித்துள்ளார்.

இதனை கண்டு அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த லைப் கார்ட்ஸ் குழுவினர் ஆற்றில் குதித்து மூதாட்டியை பத்திரமாக மீட்டனர்.

தொடர்ந்து மூதாட்டிக்கு முதலுதவிக்கு பின் அவரிடம் நடத்தப் பட்ட விசாரணையில் கோவை முத்தணன்குளம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி கவுண்டர் என்பவரது மனைவி சுப்பம்மாள்(87) என்பதும்,கணவர் இறந்த பிறகு பார்த்துக் கொள்ள ஆள் இல்லாத காரணத்தால் லைக்கு முயன்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை மேட்டுப் பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சைக்கு பின்னர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.விரைந்து சென்ற போலீசார் அவரை மேட்டுப்பாளையத்தில் உள்ள முதியோர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img