கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின பேரணி,முகாம் மற்றும் கண்காட்சி காந்தி சிலையின் அருகில் நடைபெற்றது.
இப்பேரணியில் அரசு பல் மருத்துவக் கல்லூரியின் டீன் சுமா கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.பேரணி பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு நக ரத்தில் முக்கிய வீதி வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவச சிறப்பு பல் மருத்தவ முகாம் மற்றும் புகையிலையால் ஏற்படும் நோய்கள் பற்றி பொதுமக்கள் விழிப்புணர்வு கண்காட்சியினை பார்வையிட்டனர்.
இதில் துணை முதல்வர் டாக்டர் தங்கவேலு மற்றும் டாக்டர் சுகுமார், டாக்டர் அருண்,டாக்டர் ராமச£மி, டாக்டர் முருகன், டாக்டர் கிருஷ்ணராஜ், டாக்டர் அருள்,டாக்டர் மோகன்,டாக்டர் திருநீலகண்டன்,டாக்டர் வீரவர்மால்,டாக்டர் கலாராணி,டாக்டர் மலர்கொடி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.