Homeபிற செய்திகள்ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி

ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி

ஈரோடு ஈங்கூர் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் ஈரோடு மாவட்டம் திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளி படிப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் டாக்டர் மனிஷ் நரனவாரே கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். கல்லூரி நிர்வாக அதிகாரி கருணாகரன், முதல்வர் ராமன், பல் துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு 750 மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து உரையாற்றினர்.

படிக்க வேண்டும்

spot_img