உலக சாக்லேட் தினத்தை முன்னிட்டு இன்ஸ்டாமார்ட் வெளியிட்டுள்ள ஆய்வில், இந்தியர்களின் சாக்லேட் வாங்கும் பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இணையத்தில் வைரலான துபாய் சாக்லேட் ஆர்டர்கள் 11,739 சதவீதம் உயர்ந்துள்ளன. அதேசமயம், சர்க்கரை இல்லா சாக்லேட் ஆர்டர்கள் 85 சதவீதமும், டார்க் சாக்லேட் ஆர்டர்கள் 50 சதவீதமும் அதிகரித்துள்ளன.
மில்க் சாக்லேட்தான் தொடர்ந்து இந்தியர்களின் முதல் தேர்வாக உள்ளது. பிரீமியம் சாக்லேட் வாங்குவதில் மும்பையும், மொத்த சாக்லேட் ஆர்டர்களில் பெங்களூருவும் முன்னிலை வகிக்கின்றன. காதலர் தினத்தில் ஒரு நிமிடத்திற்கு 745 சாக்லேட்டுகள் ஆர்டர் செய்யப்பட்டதாகவும், அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவர் ஓராண்டில் ரூ.1.59 லட்சம் மதிப்பிலான சாக்லேட்டுகளை வாங்கியுள்ளதாகவும் இன்ஸ்டாமார்ட் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு, ஜூலை 2025 முதல் ஜூன் 2026 வரை இந்தியாவின் 130க் கும் மேற்பட்ட நகரங்களில் பதிவான இன்ஸ்டாமார்ட் ஆர்டர்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.



