fbpx
Homeபிற செய்திகள்மார்பை திறக்காமல் இரட்டை இதய வால்வு மாற்றம்; காவேரி மருத்துவமனை சாதனை

மார்பை திறக்காமல் இரட்டை இதய வால்வு மாற்றம்; காவேரி மருத்துவமனை சாதனை

சென்னை ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவ மனையில், 58 வயது நோயாளிக்கு பழுதடைந்த பெருந்தமனி மற்றும் நுரையீரல் தமனி ஆகிய இரண்டு இதய வால்வுகளும் மார்பை திறக்காமல், முழுமையாக கதீட்டர் வழி சிகிச்சை மூலம் வெற்றிகரமாக மாற்றப்பட்டன.
உலகிலேயே முதல் முறையாக ‘போஸ்ட் ராஸ் டபுள் வால்வ் ரெஸ்க்யூ’ சிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக மருத்து வமனை தெரிவித்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு ‘ராஸ்’ அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிக்கு, செயற் கை நுண்ணறிவு உதவி யுடன் துல்லியமாக திட்டமிடப்பட்ட இந்த சிகிச்சை மேற்கொள் ளப்பட்டது. சில நாட்களில் உடல்நலம் தேறிய நோயாளி வீடு திரும்பினார்.

காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் இயக்குநர் – ட்ரான்ஸ்கதீட்டர் ஹார்ட் வால்வ் தெரபிஸ் டாக்டர் ராஜாராம் அனந்தராமன் கூறுகையில், “உலக மருத்துவ வரலாற்றில் முழுமையாக கதீட்டர் மூலம் ‘டபுள் ட்ரான்ஸ்கதீட்டர் ராஸ் ரெஸ்க்யூ’ சிகிச்சை செய்யப் பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்“ என்றார்.
காவேரி மருத்துவ மனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் டாக்டர் அரவிந்தன் செல் வராஜ் பேசுகையில், “ இந்தியாவில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ ஆதாரங்களின் அடிப் படையிலான அதிநவீன சிகிச்சைகளை வழங்குவதில் உள்ள எங்களது தொடர் அர்ப்பணிப்பையும் இது எடுத்துரைக்கிறது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img