fbpx
Homeபிற செய்திகள்ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சாய்சிட்டி 2026-27ம் ஆண்டுக்கு புதிய தலைவராக டாக்டர் பாலமுருகன் பொறுப்பேற்பு

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சாய்சிட்டி 2026-27ம் ஆண்டுக்கு புதிய தலைவராக டாக்டர் பாலமுருகன் பொறுப்பேற்பு

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சாய்சிட்டியின் 2026-27-ஆம் ஆண்டுக்கான தலைவராக, கோவை டயாபெட்டீஸ் ஸ்பெஷாலிட்டி சென்டர் மற்றும் மருத்துவமனையின் நிறுவனர், மூத்த நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் ஆர்.பாலமுருகன் பொறுப் பேற்றார். கோவையில் உள்ள ஹோட்டல் கிராண்ட் ரீஜென்டில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கிளப்பின் செயலராக ஜே.பாலாஜியும், பொருளா ளராக ராஜவேலும் பொறுப்பேற்றனர். விழாவில், தமிழக மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் துறையின் ஓய்வுபெற்ற இயக்குநர் டாக்டர் ஜெ.ராஜமூர்த்தி தலைமை விருந்தினராகவும், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் அபுல் ஹசன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
இந்திய மருத்துவ சங்கம், கோவை கிளைத் தலைவர் டாக்டர் பி.கோஷல்ராம் உள்ளிட்டோர் புதிய நிர்வாகக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்களுக்கு ரூ.39,500 கல்வி உதவித்தொகையும், பொருளாதார நலிவில் உள்ள இளம் இசைக் கலைஞருக்கு ரூ.10,000 நிதியுதவியும் வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img