fbpx
Homeபிற செய்திகள்ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியின் விளையாட்டு விழா கோலாகலம்

ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியின் விளையாட்டு விழா கோலாகலம்

சேலம் ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சேலம் மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் மற்றும் எஸ்.ஆர்.சி ப்ராஜெக்ட் திட்ட இயக்குநர் விமலன் தலைமை விருந்தினராக பங்கேற்றார். ஜெம் மருத்துவமனை டாக்டர்.என்.ஆனந்த் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக ஹோலிகிராஸ் அருட் சகோதரர்கள் சபையின், புனித ஆண்ட்ரே புராவின்ஸின் தலைவர் சந்தோஷ் பங்கேற்றார்.

ஹோலிகிராஸ் பள்ளியின் தாளாளரும், முதல்வருமான அருட்சகோதரர் சேசுராஜ் தலைமையேற்று நடத்தினார்.

இதில் பள்ளியின் நிர்வாகி அருட்சகோதரர் யேசுதாசன் மற்றும் ஹோலிகிராஸ் சி.பி.எஸ்.இ பள்ளியின் முதல்வர் அருட்சகோதரர் ஸ்டீபன், ஹோலிகிராஸ் மெ.மே.நி.பள்ளியின் துணை முதல்வர் அந்துவான் குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பள்ளியின் பல்வேறு அணிகள் மற்றும் மேனாள் மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை தலைமை விருந்தினருக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக அம்மாப் பேட்டை காமராஜர் வளைவில் பள்ளியின் மேனாள் மாணவர் மன்றத் தலைவர் வசந்த் குமார் ஒலிம்பிக் சுடர் ஏற்றி வைத்தார்.


அச்சுடரை வென்ற நம் பள்ளி மாணவர்கள் ஏந்தி வர, பள்ளி வளாகத்தில் மேனாள் மாணவர் மன்ற துணைத்தலைவர் டாக்டர். ரமேஷ் மற்றும் பள்ளியின் விளையாட்டு இணை செயலாளர் மாணவர் ப்ரீத்திவிராஜ் கலந்து கொண்டனர்.

பள்ளியின் மாணவத் தலைவர் சயத் முகமது தாஹா வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img