திண்டுக்கல் நகர் பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் அதிகாரிகளுடன் அதிரடி ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் மாவட் டத்தில் புயல் காரணமாக கனமழை பெய்துவருகிறது. நகரின் பல முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்கி குளம் போல் நிற்பதை அறிந்த திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் நகர் முழுவதும் மற்றும் கிராம பகுதிகளுக்கு சென்று நீர்வரத்து பாதைகளை ஆய்வு செய்தார்.

அப்போது சிறுமலை யிலிருந்து வரக்கூடிய தண்ணீர் வரத்து பாதைகளில் அடைப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க செய்தார்.
அதன் பின்னர் நேருஜி நகர் இரயில்வே சுரங்கப் பாதை, பாலகிருஷ்ணாபுரம் இரயில்வே சுரங்கப் பாதைகளில் மழை நீர் குளம்போல் தேங்கி நிற்பதை பார்வையிட்ட திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் அவற்றை அப்புறப்படுத்தி நிரந்தர தீர்வு ஏற்படுத்த அதிகாரிகளிடம் வேண்டு கோள் விடுத்தார்.
அதன் பின்னர் முத்தழகுபட்டி சென்று திண்டுக்கல் – பழனி பைபாஸ் அருகில் உள்ள சர்வீஸ் ரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை பார்வையிட்டு, நீர்வழித் தடங்களை முறையாக அமைத்து உபரி நீரை அருகிலுள்ள குளங்களுக்கு செல்ல அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆய்வின்போது, தேசிய நெடுஞ்சாலை துணை வட்டாரப் பொறியாளர் மணிகண்டன், திண்டுக் கல் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், மாநகராட்சி பொறியாளர் சனல்குமார், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, பொதுக்குழு உறுப்பினர் அக்பர், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், விவசாய அணி அமைப்பாளர் இல.கண்ணன், பகுதி செயலாளர்கள் முத்தழகுபட்டி சூசை இராபர்ட், ஜானகிராமன், ராஜேந்திரகுமார், பஜ்ருல்ஹக், ரெட்டியார் சத்திரம் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் செல்வம், பள்ளபட்டி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் பாண்டி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.



