மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் நோக்கில், கோவை ஜெம் மருத்துவமனையின் ஜெம் மார்பக சிகிச்சை மையம் சார்பில் ‘பிங்க் கொங்கு’ இலவச விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.
அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் இம்முகாமில், அறிகுறிகள் இல்லாத 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச மார்பக ஊடுகதிர் பரிசோதனை (மேமோகிராம்) வழங்கப்படுகிறது. மார்பகத்தில் கட்டி, காம்பில் திரவம் வெளியேறுதல், அளவு அல்லது வடிவ மாற்றம் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ள பெண்கள் வயது வித்தியாசமின்றி மருத்துவப் பரிசோதனை பெறலாம்.
நவம்பர் மாத இறுதி வரை நடைபெறும் இம்முகாமில் பங்கேற்க, 7530033945 என்ற எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்யலாம்.



