fbpx
Homeபிற செய்திகள்சர்வதேச ‘ரீஜென் 2025’ மாநாட்டில் பிளாஸ்மா சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

சர்வதேச ‘ரீஜென் 2025’ மாநாட்டில் பிளாஸ்மா சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

மீள்உருவாக்க மருத்துவம், எலும்புசார் உயிரியல் சிகிச்சைகள், வலி மேலாண்மை மற்றும் விளையாட்டு காயத்திற்கான மறுவாழ்வு ஆகியவற்றிற்கு 2 நாள் சர்வதேச மாநாடான ‘ரீஜென் 2025’-இன் இரண்டாவது பதிப்பு, சென்னையில் தொடங்கியது.


இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் பங் கேற்கின்றனர். எலும்பியல், விளையாட்டு தொடர்பான பாதிப்புகள் மற்றும் சிதைவு நோய்களுக்கு குணமளிப் பதற்கு செறிவூட்டப்பட்ட இரத்தத்தட்டுகளுடன் கூடிய பிளாஸ்மா (PRP) சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.

இரத்த தட்டுகள் (பிளேட்லெட்கள்) செறிவூட்டப்பட்ட பிளாஸ்மா சிகிச்சைக்கான (PRP) வழிகாட்டுதல்கள் இம்மா நாட்டில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் சென்னை மாநகரில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஒரு நாள் நேரடிப் பயிற்சிப் பயிலரங்கு நடத்தப்பட்டது.


மாநாட்டின் தொடக்க அமர்வில், ஆர்த்தோ பயாலஜிக்ஸ் கிளினிக்கின் நிறுவனர் டாக்டர் ஷர்மிளா துல்புலே பேசுகையில், “மீள்உருவாக்க மருத்துவம் சுகாதாரப் பாதுகாப்பில் மிகவும் நம்பிக்கையளிக்கும் துறைகளில் ஒன்றாக வேகமாக வளர்ந்து வருகிறது” என்றார்.


சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் மயக் கவியல் மற்றும் வலி மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் ஜி.கே. குமார் பேசுகையில், “ புதிதாக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் ஒரு விரிவான, சான்றுகள் அடிப்படையிலான கட்ட மைப்பை வழங்குவதன் மூலம் முக்கியமான இடைவெளியை நிரப்புகின்றன” என்றார்.


ஆர்த்தோபயாலஜிக்ஸ் பயோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிறுவனர் நிதின் துல்புலே பேசுகையில், “நாள் பட்ட வலி, விளையாட்டு காயங்கள் மற்றும் சிதைவு நோய்களுக்கு குறைந்தபட்ச ஊடுருவலுடன் கூடிய, தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்குவதன் மூலம் மருத்துவ நெறிமுறைகளை இத் தொழில் நுட்பங்கள் வேகமாக மறுவடிவமைப்பு செய்து வருகின்றன” என்றார்.


சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் முதுநிலை ஆலோசகர் டாக்டர் நவலாதிசங்கர் பேசுகையில், “ரீஜென் 2025- மாநாட்டில், இந்த PRP வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது ஒரு அறிவியல் சாதனை மட்டுமல்ல; இது இந்தியாவின் முழு மீள் உருவாக்க மருத்துவச் சூழல் அமைப்பிற்கும் உத்வேகமளிக்கும் ஒருங்கிணைப்பு செயல்பாடாக இருக்கிறது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img