எச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்கத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா தூத்துக்குடி சந்திர மஹாலில் நடைபெற்றது. எச்.எம்.எஸ் உழைப்பாளர் சங்க மாவட்டத் தலைவரும் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினரும் (எச்.எம்.எஸ்) தேசிய துணைத்தலைருமான டாக்டர் ராஜலட்சுமிராஜ்குமார் தலைமையில், துணைத் தலைவர் ராதா ஆனந்தராஜ் முன்னிலையில் நடைபெற்ற மகளிர் தினவிழாவில் சிறப்பு அழைப்பாளராக எச்.எம்.எஸ் மாநில தலைவர் சுப்ரமணியன், அயிரவன் பட்டி தொழிலதிபர் எம்.சி.முருகேசன், எச்.எம்.எஸ் மாவட்ட பொதுச் செயலாளர் துறைமுகம் சத்யா, எச்.எம்.எஸ் மாவட்ட தலைவர் டாக்டர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் காந்தி சேகர், நெல்லை மாவட்ட தலைவர் முகமது ஷாஜஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சாதனைப் பெண்களுக்கான விருது
எச்.எம்.எஸ் துணைத் தலைவர் சின்னத்தாய் விழா வரவேற்புரை வழங்கினார்.
விழாவில் சாதனைப் பெண்களுக்கான விருதை ஆசிய பசிபிக் பிராந்திய பாலினம் மற்றும் நிதி மேளான்மை நிர்வாகி கீதாஐயர், டாக்டர் டேவிஸ் சுகந்தம், தென் சென்னை திமுக நிர்வாகி வாசுகி பாண்டியன், அயிரவன்பட்டி ஊராட்சி தலைவர் சாவித்திரி, சிறப்பு எஸ்ஐ ராஜ கீதா, வழக்கறிஞர் சொர்னலதா, மாநகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை இந்திரா காந்தி, வருவாய் ஆய்வாளர் ராதா, சமூக ஆர்வலர் சுப பிரியா, ஆத்தூர் ஆசிரியை ரோஸ்லின் ஜூலியான்ஸ் ஆகியோருக்கு அயிரவன் பட்டி தொழிலதிபர் எம்.சி.முருகேசன் வழங்கி கௌர வித்தார். தொடர்ந்து மகளிர்க ளுக்கு கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து வெற்றிபெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் மகளிர் அணி ஜானகி, ராஜேஸ்வரி, சந்திரா மணி, சரஸ்வதி, உமா மகேஸ்வரி ஹரிணி மாலதி காயத்ரி, காமாட்சி, ஆனந்த செல்வி, பூர் ணிகா அஸ்வினி, இளைஞரணி பிர சன்னா, சாதிக் பாஷா, ஆகியோர் கலந்து கொண்டனர்.நிறைவாக பொருளாளர் பெஸி நிர்மல் நன்றி தெரிவித்தார். மேஜிக் ஜேம்ஸ் மணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.