fbpx
Homeபிற செய்திகள்டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் கண் அழுத்த நோய் விழிப்புணர்வை உருவாக்க சென்னையில் மனிதச்...

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் கண் அழுத்த நோய் விழிப்புணர்வை உருவாக்க சென்னையில் மனிதச் சங்கிலி, வாக்கத்தான்

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, கண் அழுத்த நோய் (கிளாக்கோமா) மற்றும் அதற்கான சிகிச்சை மீது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உயர்த்துவதற்காக ஒரு மனிதச்சங்கிலி நிகழ்வை சென்னையில் நடத்தியது.
உலக கண் அழுத்த நோய் வாரம் (மார்ச் 12-&18), அனுசரிப்பு நிகழ்வின் ஓர் அங்கமாக இது நடத்தப்பட்டது.

அதிகரித்த அழுத்தத்தின் காரண மாக பார்வைத்திறன் படிப்படியாக குறைந்து குருடாக்கும் தன்மை கொண்ட இந்த கண் அழுத்த நோய் குறித்தும் மற்றும் அதற்கு உரிய சிகிச்சையை தொடக்க நிலையிலேயே பெற வேண்டிய அவசியத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்கூறி அவர்க ளின் விழிப்புணர்வை அதிகரிப்பதே உலக கண் அழுத்த நோய் வாரம் அனுசரிக்கப்படுவதன் குறிக் கோளாகும்.

எனவே இதனையொட்டி டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இம்மாநகரில் வாக்கத்தான் நிகழ்வையும் மற்றும் மனிதச்சங்கிலி நிகழ்வையும் நடத்தியது.
தென் சென்னையின் காவல்துறை உதவி ஆணையர் (போக்குவரத்து) ஹிட்லர் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறையின் பிராந்திய தலைவர் டாக்டர் ஸ்ரீனிவாச ராவ் கூறியதாவது: மீண்டும் சரிசெய்ய முடியாத பார்வைத்திறனிழப்பிற்கு (குருடாதல்) இட்டுச்செல்லும் கண் கோளாறுகளின் ஒரு தொகுப்பான கண் அழுத்த நோய் (கிளாக்கோமா) மிக அதிக எண்ணிக்கையில் மக்களிடம் காணப்படுவதால், உலக ளவில் இந்நோய்க்கான தலைநக ரமாக இந்தியாவை குறிப்பிடலாம்.

கண் அழுத்த நோய்

ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளையும் கண் அழுத்த நோய் வெளிப்படுத்துவதில்லை என்பதால், ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பு இருப்பதை கண்டறிவதற்கான பரிசோதனைகளை செய்வதும் மற்றும் உகந்த சிகிச்சையைப் பெறுவதுமே பார்வையைப் பறிக்கின்ற இந்த கடுமையான நோயின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறையாகும் என்றார்.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணர் டாக்டர் கே. சுகி பிரியா பேசுகையில், “எந்த வயதிலும் கண் அழுத்த நோய் ஒருவரை பாதிக்கக்கூடும். எனினும் 40 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், கண் அழுத்த நோய் பாதிப்பு வரலாற்றைக் குடும்பத்தில் கொண்டிருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் உயர்ந்த ஒளிவிலகல் குறைபாடுகள் உள்ளவர்கள், ஸ்டீராய்டை உள்ளடக்கிய கண் சொட்டு மருந்து, மாத்திரைகள், இன்ஹேலர்கள் மற்றும் சருமக் க்ரீம்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவோர் கண் அழுத்த நோயால் பாதிப்பிற்கு ஆளாகக்கூடிய இடர்வாய்ப்புள்ள நபர்களாவர்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img