ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்-தின் உறுதிமிக்க போராட்டத்தின் 75 ஆண்டுகளுக்கான பரப்புரை இயக்கத்தின் ஒரு பகுதியாக நமது மாவட்ட அளவில் ஊடக நண்பர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நேற்றைய தினம் போத்தனூர் சாலையில் அமைந்துள்ள வசந்தம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், குறும்பட தயாரிப் பாளர்கள், இயக்கு நர்கள், யூடியூபர்ஸ், பத்திரிகை நண்பர்கள் என இரு பதுக்கும் மேற்பட்ட ஊடக வியலாளர்கள் கலந்து கொண்டார்கள்.
ஆலோசனை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்-தின் பணிகள் அறிமுகம் செய்யப்பட்ட தோடு, குறிப்பாக ஊடகத் துறையில் ஜமாஅத் ஆற்றிவரக்கூடிய பணிகளை பற்றி எடுத் துரைக்கப்பட்டது. மேலும், ஜமாஅத் எதிர்காலத்தில் கோவையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை குறித்து பத்திரிக்கை நண்பர்கள் ஆலோசனைகளை வழங் கினார்கள்.
இந்நிகழ்வில் ஜனாப் பி.எஸ்.உமர் ஃபாரூக் சாஹிப் தலைமை உரையாற்றினார். ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்-தின் பணிகள் பற்றி முனைவர்.சையது அபுதா ஹிர் விளக்கி கூறினார்.
இறுதியாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநில செயலாளர் ஜனாப் எஸ்.என்.சிக்கந்தர் சாஹிப் சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்வை சகோ.சபீர் அஹமது வழிநடத்தினார்.