Homeபிற செய்திகள்திடக்கழிவு மேலாண்மை மையம்அமைக்க இந்து முன்னணி எதிர்ப்பு

திடக்கழிவு மேலாண்மை மையம்அமைக்க இந்து முன்னணி எதிர்ப்பு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மயானத்தில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைப்பதற்கு, இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் தோண்ட தோண்ட மனித உடல்களின் பாகங்கள் வருவது இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


கோவை நஞ்சேக வுண்டன்புதூர் பகுதியில் இந்து மக்களின் உடல்களை புதைக்கும் மயானம் உள்ளது. இந்த மயானத்தில் கோவை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.


இதற்கு நஞ்சேகவுண்டன் புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே மாநகராட்சியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


இதனை தொடர்ந்து இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சதீஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் எந்த ஆலோசனைகளையும் கேட்காமல் தன்னிச்சையாக இந்த முடிவை செய்துள்ளது. தற்போது திடக்கழிவு மேலாண்மை மையம் அமைக்கும் இடத்தில் குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. அப்போது அங்கு புதைக்கப்பட்ட உடல்களின் பாகங்கள் வெளியே வருகின்றன. இது மனவேதனையை ஏற்படுத் துகிறது. இந்துக்களின் உணர்வுகளையும் புண்படுத் துகிறது. எனவே மாநக ராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கையை உடனடி யாகக் கைவிட வேண்டும்.” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img