Homeபிற செய்திகள்திருச்சியில் 242 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

திருச்சியில் 242 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

திருச்சி கலையரங்கத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் தயாள், தலைமையில் நடைபெற்ற விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கலந்து கொண்டு 242 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.

கர்ப்ப காலப் பராமரிப்பு, பாதுகாப்பான பிரசவம், தாய்ப்பால், ஊட்டச்சத்து உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழா நடத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். கர்ப்பிணிகளுக்கு புடவை, தாம்பூலம், வளையல், மங்கல நாண், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்களும், 1000 பொன்னான நாட்கள் குறித்த கையேடும் வழங்கப்பட்டன. தொடர்ந்து மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். விஜி (திருவெறும்பூர்), இரா. கதிரவன் (மணப்பாறை), எம். விக்னேஷ் (முசிறி), மாநகராட்சி ஆணையர் பொன்மணி, திருச்சிராப்பள்ளி வருவாய்க் கோட்டாட்சியர் சாலை தவவளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img