Homeபிற செய்திகள்கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் திட்டத்துக்கு ரூ.3.02 கோடி ஒதுக்கீடு

கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் திட்டத்துக்கு ரூ.3.02 கோடி ஒதுக்கீடு

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்துக்கு 2026-27ம் ஆண்டில் கடலூர் மாவட்டத்திற்கு ரூ.3 கோடியே 2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் 11 குடும்பங்களை சேர்ந்த 22 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.5½ லட்சம் வைப்புத்தொகைக்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.

இது குறித்து கலெக்டர்  கூறுகையில், நடப்பாண்டில் 508 குழந்தைகளின் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 27 லட்சம் வைப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இத்திட்டத்தில் ஒரு பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரமும், 2 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வைப்புத்தொகையாக வழங்கப்படுகிறது.

முதல் அல்லது 2-வது பெண் குழந்தை பிறந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்றார். இந்த ஆணை வழங்கும் நிகழ்வில்

மாவட்ட சமூக நலன் அலுவலர் ராஜம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img