கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஓணம் பண்டிகை பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் கேபிஆர் கல்வி நிறுவனங்களின் செயலர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் அகிலா முத்துராமலிங்கம் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.
கேரள பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் ஆடை அணிவகுப்பு, நடன நிகழ்ச்சிகள், வடம் இழுத்தல், உரியடி, சாக்கு ஓட்டம், எலுமிச்சை& கரண்டி ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. இருசக்கர வாகன சாகசம், செண்டை மேளம் நிகழ்ச்சிகள் மாணவர்களை வெகுவாக கவர்ந்தன. இதில் பாரம்பரிய உணவான ‘ஓண சத்யா’ விருந்து வழங்கப்பட்டது.



