Homeபிற செய்திகள்சிறுமலையில் வன உயிரினங்களை வேட்டையாடிய வாலிபர் கைது

சிறுமலையில் வன உயிரினங்களை வேட்டையாடிய வாலிபர் கைது

சிறுமலை வனப்பகுதியில் வன உயிரினங்கள் வேட்டையாடப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் காட்டுமாடு, காட்டுப்பன்றி ஆகியவற்றின் தலைகள், எலும்புகள், இறைச்சி வெட்ட பயன்படுத்திய கத்திகள் மற்றும் துப்பாக்கி பாகங்கள், காலி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல் மண்டல வனப் பாதுகாவலர் முகமது சபாப் உத்தரவின்படியும், மாவட்ட வன அலுவலர் நாகா சதீஸ் கிடிஜாலா  அறிவுறுத்தலின்படியும், வனச்சரகர் சுரேஷ் தலைமையில் வனவர் சங்கர், வனக் காவலர்கள் பார்த்திபன், திலகர் உள்ளிட்டோர் சோதனை நடத்தினர்.

இதுதொடர்பாக பிஜூ தாமஸ் (35) என்பவரை பிடித்து விசாரித்ததில், கல் கோட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டுத்துப்பாக்கியின் பாகங்கள் மற்றும் 3 காலி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img