கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட ஒண்டிப்புதூர் பகுதியில் மக்கள் பயன்பெறும் வகையில் எஸ்.ஐ.எச்.எஸ் குடியிருப்பு பகுதியில் நடைபெற்று வரும் உயர் மட்ட மேம்பால பணியை கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ் செல்வன், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்வில் ஒண்டிப்புதூர் பகுதி கழக பொறுப்பாளர் கஸ்தூரி அருண், கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக், பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் சசிக்குமார், 56 வது மாமன்ற உறுப்பினர் அன்பு (எ)தர்மராஜ், வட்டக் கழக செயலாளர்கள் ராஜேந்திரன்,சுரேஷ், சின்னசாமி, வேலுமணி, சதிஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



