fbpx
Homeபிற செய்திகள்பல்சமய கிறிஸ்துமஸ் இன்னிசை விழா: ஆடல், பாடல்களுடன் கோலாகலம்

பல்சமய கிறிஸ்துமஸ் இன்னிசை விழா: ஆடல், பாடல்களுடன் கோலாகலம்

கோவை மாவட்ட அனைத்து திருச்சபைகள் இணைந்து நடத்திய பல்சமய கிறிஸ்துமஸ் இன்னிசை விழா டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் அதிதூதர் பேராலயத்தில் நடைபெற்றது.


கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு கோவை கத்தோலிக்க மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ், சிஎஸ்ஐ கோவை திருமண்டல போதகர்கள், இசிசி உதவி தலைவர் ரெவரண்ட் டாக்டர் கருணாகரன், டிஇஎல்சி முன்னாள் பேராயர் ரெவரண்ட் டாக் டர் எட்வின் ஜெயக்குமார், பெந்தேகோஸ்தே சபைக ளின் பிரதம பேராயர் ரெவரண்ட் டாக்டர் டேவிட் பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக முத்து சிவ ராமசாமி அடிகளார், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி முன்னாள் தலைவர் அப்துல் ஜாப்பர், கோவை குருத்துவாரா சிங் சபா தலைவர் குர்பிரீத் சிங், ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் வழக்கறிஞர் நந்தகுமார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.


விழாவில் இன்னிசை பாடல்கள், கிறிஸ்துமஸ் பாடல்கள், கிறிஸ்து பிறப்பு நாடகம், நட னங்கள், திருச்சபைகளின் சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றன. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்களுடன் பொதுமக்களும் கலந்து கொண்டு பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img