இந்திய மருத்துவக் கழகத்தின் கோவை கிளை சார்பில், கிராமத் தத்தெடுப்புத் திட்டத்தின் கீழ், மூங்கில் மடைக்கோட்டை அருகே மூலைக்காடு கிராமத்தில் பொதுக் கழிப்பறை வளாகம் திறக்கப்பட்டது.

ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி வசதிகளுடன் அமைக்கப்பட்ட இவ்வளாகத்தை, இந்திய மருத்துவக் கழக தமிழகத் தலைவர் டாக்டர் பி. ஸ்ரீதர் திறந்து வைத்தார். கோவை கிளைத் தலைவர் டாக்டர் பி. கோஷல் ராம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதையொட்டி, இலவச பல்துறை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள், கண் பரிசோதனைகள், இலவச மருந்துகள் வழங்கப்பட்டன. கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் வகையில் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இத்திட்டத்தை டாக்டர் அனுஷா கோஷல் ராம் ஒருங்கிணைத்தார்.



