சென்னை அரை மாரத்தானின் 6வது பதிப்பு 2024 மாநகரில் நவம்பர் 24ல் நடைபெறவிருக்கிறது. இதில், 6000-க்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர்.
அப்போலோ டயர்ஸ்-ன் ஆதரவோடு NEB ஸ்போர்ட்ஸ் ஏற்பாடு செய்து நடத்தும் இந் நிகழ்வில் அனைத்து வயது பிரிவுகளையும் மற்றும் பல்வேறு பின்புலங்களையும் சேர்ந்த ஓட்டப்பந்தய ஆர்வலர்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் பங்கேற்க விருக்கின்றனர்.
பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் நினைவு உயர்நிலைப்பள்ளி மைதானத்திலிருந்து ஆரம்பமாகும் இந்த அரை மாரத்தான் நிகழ்வு சென்னையின் அழகான வழித்தடங்கள் வழியே பயணிக்கும்.
இந்நிகழ்வுகளில் பங் கேற்க அப்போலோ டயர்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், இன்டஸ் இண்ட் வங்கி போன்ற பல கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊக்குவித்திருக்கின்றன. பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான அமிர்தாஞ்சன், இந்நிகழ்விற்கான வலி நிவாரணி பார்ட்னராக தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது.
“ஆரோக்கியத்தையும் முன்னிலைப்படுத்தும் இத்தகைய நிகழ்வுகளுக்காக ஒன்றுபட்டால் ஒட்டு மொத்த சமுதாயத்தின் நலனுக்கும், முன்னேற்றத் திற்கும் இது பலனளிக்கும்“ என்று புலனாய்வுத் துறையின் தலைமை இயக்குநர் பிரதாப் சிங் கூறினார்.
“உடற்தகுதியுடன்கூடிய செயல்திறனை அனைத்து பிரிவினர் மத்தியிலும் இது ஊக்குவிக்கும்,” என்று அப்போலோ டயர்ஸ்-ன் ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங் அண்டு கம்யூனிட்டீஸ் பிரிவின் தலைவர் ரீமஸ் டி’க்ரூஸ் கூறினார்.